பேராயரின் வாழ்த்துரை


வரவேற்பு செய்தி


  C.S.I சகல பரிசுத்தவான்கள் ஆலயம் (வேலூர் ) வரலாற்றில் 149-ஆம் ஆண்டு முடிவும் மற்றும் 150-ஆம் ஆண்டு ஆரம்பமும் - 2022.

உங்கள் யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துக்கள்.

கிறிஸ்துவுக்குள் அன்பான அனைத்து திருச்சபை மக்களுக்கும் மற்றும் என் உடன் விசுவாசிகள் அனைவருக்கும் ஸ்தோத்திரங்களையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன். 149 ஆண்டுகள் என்பது சாதாரண காரியம் அல்ல. இது கர்த்தராலே ஆயிற்று. நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. கடந்த காலம் பல மூப்பர்களையும், தாய்மார் சங்க தலைவிகளையும், பல வாலிப சகோதர சகோதரிகளையும், பல ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் , பல ஞாயிறு பள்ளி சிறுவர்கள் சிறுமிகள், பல அறுவடைப் பண்டிகைகள், பல பாடகர் குழுக்கள் மற்றும் அங்கத்தினர்கள், பல PC செயலர்கள், பொருளர்கள், பல குருசேகர குழு அங்கத்தினர்கள், பல திருமுழுக்குகள், பல திடப்படுத்தல் ஆராதனைகள், பல ஆவிக்குரிய செயல்கள் மூலமாக சபை வளர்ந்துள்ளது. பலர் அங்கத்தினர்களாக புதிதாக வந்து சேர்ந்தனர்.

பல மிஷினரிமார்கள் குடும்பங்களை நாம் ஜெபித்து அனுப்பியுள்ளோம், பலர் மிஷினரி குடும்பங்களைை தங்கள் ஜெபத்தினாலும், காணிக்கையாலும் தாங்கி வருகின்றனர். 2019,2020,2021 ஆண்டுகளில் நம் குடும்பத்து மக்களை கொரோனாவால் இழந்து இருக்கிறோம். பெரியவர்கள், நடுத்தர வயதினர், சிறு பிள்ளைகள் என்று ஆண்டவரின் தீர்மானத்திற்கும், சித்தத்திற்கும் ஓப்புக் கொடுத்திருக்கிறோம். பழைய ஆலயம் மறக்க முடியாதது. பல போதகர்களை ஊழியப் பாதையில் கொண்டு வந்தது.

இவையெல்லாம் நம் திருச்சபை முன்னோர்களின் முழு விசுவாசம் மற்றும் நம்பிக்கை வாழ்வு ஆகும். ஆகவே குடும்பமாக, திருச்சபையாக ஆண்டவருக்கு நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்க அழைக்கப்படுகிறோம். 149 ஆண்டுகளை நினைவுகூறுவோம். நன்றி, நன்றி, நன்றி.

  150-வது ஆண்டு ஆரம்பம் 1-11-2022

அன்புக்குரியவர்களே, இது ஆச்சரியமும், அதிசயமுமாகும். சகல பரிசுத்தவானின் ஆலயத்தில், புதிய ஆலயத்தில் இந்த 150-வது ஆண்டு ஆரம்ப விழா என்பது ஆண்டவர் கொடுத்த மகிழ்ச்சி, சந்தோஷம், கொண்டாட்டம். நம்முடைய சொந்த கண்களாலே நாம் காண்கிறோம். நம்முடைய நினைவுகளை ஆண்டவர் நிச்சயமாக்குகிறார்.

1. பேராயரின் ஆசியுடன் ஆலய வளாகத்தில் ஏழைப் பெண்கள், கைவிடப்பட்ட பெண்களுக்கான Community Centre, ஒரு தரிசனம்.
2. பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு ஒரு மாதம்.
3. ஆண்கள் ஐக்கிய சங்கத்திற்காக ஒரு கூடுகை ஒரு மாதம்.
4. வாலிப சகோதர, சகோதரிகளுக்காக youth carnival ஒரு மாதம்.
5. ஏழைகளுக்கு சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக செதுவாலை பகுதியில் உள்ள குறவர்கள் மத்தியில் மருத்துவ ஊழியம்.
6. எளிதில் செல்ல முடியாத கிராமங்களில் இயேசு கிறிஸ்துவை அறிவித்தல், உதவி கரம் நீட்டுதல்.
7. சகல பரிசுத்தவான்கள் திருச்சபை மூப்பர்கள் குழு மூலமாக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல்.
8. இந்த 150-வது ஆண்டில் ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளை மேலும் உற்சாகப்படுத்தி ஆண்டவர் வழியிலும், திருச்சபை வாழ்விலும் பங்கெடுக்க செய்தல்.
9. நம்முடைய திருச்சபை பாடகர் குழுவை மேலும் வளர்த்தல்.
10. இந்த 150-வது ஆண்டில் நம்முடைய திருச்சபைக்கென்று கல்லறைத் தோட்டம் ஆண்டவர் ஏற்பாடு செய்ய ஜெபமும் முயற்சியும் செய்தல்.


ஆகவே, இந்த 150 ஆண்டு முழுவதும் கொண்டாட்டமும் ஊழியங்களும் நடைபெற ஆண்டவர் நமக்கு ஆலோசனையும், ஆதரவும், பாதுகாப்பும் தந்தருள்வாராக. எல்லா துதியும், கணமும், மகிமையும் இயேசுவுக்கே. இப்பொழுதுள்ள குருசேகர குழுவையும் 150-வது ஆண்டு குழுவையும் வாழ்த்துகிறேன். ஆண்டவர் நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து சந்திப்பாராக. கோயில் பிள்ளை அவர் தம் மனைவி பிள்ளைகள் ஊழியத்தை ஆண்டவர் வழிநடத்துவாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்,

Rev.J. டேவிட் ஞானப்பிரகாசம்
ஸ்தல போதகர்


Special programmes to commemorate Sesquicentennial year Celebrations
நிகழ்வு விவரங்கள்

ஆராதனை ஒழுங்கு

தேவாலய நிகழ்வுகள் (2023)


 • லெந்தென்னும் நாட்களில் ஐந்தாம் ஞாயிறு

 • உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன்வரும் ஞாயிறு

 • கிறிஸ்து உயிர்தெழுந்த திருநாள் (ஈஸ்டர் பண்டிகை)

 • உயிர்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் முதலாம் ஞாயிறு

 • உயிர்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் இரண்டாம் ஞாயிறு

 • உயிர்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் மூன்றாம் ஞாயிறு

திருவிருந்து ஆராதனை

 • மாதத்தின் முதல் நாள் : காலை 6:30 மணி
 • மாதத்தின் முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் ஞாயிறு : காலை 8:30 மணி


பொது ஆராதனை

 • மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிறு : காலை 8:30 மணி


ஆண்கள் ஐக்கிய சங்கம், பெண்கள் ஐக்கிய சங்கம் மற்றும் வாலிபர் ஐக்கிய சங்க கூட்டம்

 • மாதத்தின் மூன்றாம் ஞாயிறு : ஆராதனைக்குப்பின்


ஒய்வு நாள் பள்ளி

 • ஞாயிறுதோறும் காலை 9:00 மணிக்கு

மாதாந்திர ஜெபகூடுகை

 • மாதத்தின் முதல் சனி மாலை 6:00 மணி

மாதாந்திர உபவாசக்கூடுகை

 • மாதத்தின் இரண்டாம் சனி : காலை 11:00 மணிமுதல் மாலை 03:00 மணிவரை

வேத தியான வகுப்பு

 • இரண்டாம் ஞாயிறு : காலை 11:00 மணிமுதல் 01:00 மணிவரை

வேதவசன மனப்பாட மற்றும் வேதா வினா போட்டி

 • மாதத்தின் நான்காம் ஞாயிறு : காலை 10:30 மணி

Liturgical Colours

Liturgical Colours Details (2023)

Epiphany Season - 46 days - January 7 to February 21 - Green Color

Lenten Season - 46 days - February 22 to April 8 - Purple Color

Easter Season - 49 days - April 9 to May 27 - White Color

Pentecost Season - 7 days - May 28 to June 3 - Red Color

Trinity Sunday - 1 day - June 4 - White Color

Pentecost Season - 181 days - June 5 to December 2 - Green Color

Advent Season - 22 days - December 3 to December 24 morning - Purple Color

Christmas Season - 14 days - December 24 evening to January 6 - White Color


CSI LECTIONARY (2023)

உயிர்த்தெழுந்த திருநாளுக்குப் பின்வரும் நாலாம் ஞாயிறுு

சுருக்க ஜெபம்: சர்வ வல்லமையுள்ள தேவனே, பாவிகளுடைய அடங்காத சித்தத்தையும் ஆசாபாசங்களையும் அடக்கி ஆளுகிறவரே, பலவித மாறுதலுள்ள இவ்வுலகத்தில் நாங்கள் இருக்கையில் எங்கள் இருதயம் மெய்சந்தோஷங்களுள்ள மேலுலகத்தைப் பற்றிக்கொண்டு உறுதியாய் நிலைத்திருக்கும்படி, தேவரீர் கற்பித்தவைகளை நாங்கள் நேசிக்கவும், நீர் வாக்குத்தத்தம் பண்ணினவைகளை விரும்பவும், எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உம்முடைய ஜனமாகிய எங்களுக்குக் கிருபை செய்தருளும்.ஆமென்.

நிருபவாக்கியம்: பரி. யாக. 1:17-21. (நன்மையான- கொள்ளுங்கள்.)

சுவிசேஷவாக்கியம்: பரி. யோவா. 16:5-15. (இயேசு-என்றேன்)

CSI LECTIONARY (2023)

May 7, 2023, 4th Sunday after Easter

Believing in Christ: The Way

OT => Exodus 14:10-20       Gospel => John 14:1-7

Psalm => Psalm 116       Epistle => Acts 16:19-34

Collect:  God, our parent, whom we know through Your Son, Jesus Christ, the Way, the Truth and the Life, help us to believe in Him and be saved, So that we walk in Your light, having fellowship with one another, and the blood of Jesus Christ, who lives and reigns with You and the Holy Spirit, One God, now and forever more. Amen.


சமீபத்திய நிகழ்வுகள்

About Us

About Us

Read More

ALL SAINTS' CHURCH VELLORE

All Saints Church has been existing from the close of 19th Century. There were only two Anglican Churches established in North Arcot District, one is St. John's Church, Fort, Vellore. The All Saints Church was started for the Tamil worshippers. The All Saints church has a special significance as it has brought in the Anglican tradition to Vellore Diocese.

Church History

Read More

Our Ministries

Mens Fellowship

...

The Men’s Fellowship was started in church to promote fellowship among men, help in the understanding of the Bible and to serve the Church.
Read more

Women's Fellowship

...

Women's Fellowship was started in church to provide encouragement and community for women in every stage of life, while equipping them through God’s word.
Read more

Youth Fellowship

...

Youth Fellowship was started in church to help the youth's to discover the plans and purposes God has for their lives in an environment specifically designed for them
Read more