வாலிபர் ஐக்கிய சங்கம்



“உன் இளமையைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. (1 தீமத். 4:12)

உலகில் திருச்சபைகள் வளர்ச்சியடைந்த காலங்களில் வாலிபர்களுக்கான ஊழியங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதன்பின் வாலிபர்களால் செய்யப்படும் ஊழியங்களும் உருவாயின. 1844 ஆம் ஆண்டில் இங்கிலாந்து தேசத்தில் ஜார்ஜ் வில்லியம் என்பவரால் ஆர்ம்பிக்கப்பட்ட YMCA இயக்கமானது உலகெங்கும் வளரத்தொடங்கியது. காலப் போக்கில் இவைகள் திருச்சபையின் பணிகளைவிட்டு சமூக பணிகளில் உற்சாகம் கொண்ட தனி இயக்கங்களாயின. எனவே வாலிபர்களது ஆவிக்குரிய வாழ்வில் அக்கரை கொண்ட ப்ஃரான்ஸிஸ் எட்வார்ட் க்ளார்க் என்பவர் 1881 ஆம் ஆண்டு கிஸ்தவ பக்தி முயற்சி சங்கம் (Christian Endeavor Society) என்பதனை, திருச்சபைப் பணிகளில் வாலிபர்களின் பங்களிப்பு மூலமாக திருச்சபைகளை கட்டி எழுப்பும் எண்ணத்துடன் போர்ட்லாந்து தேசத்தில் உள்ள வில்லிஸ்டன் திருச்சபையில் நிறுவினார். அடுத்த ஏழு ஆண்டுகளில் இச்சங்கமானது 700 க்கு மேற்பட்ட கிளைகளுடன் 50000 த்திற்கும் மேலான அங்கத்தினர்களுடன் பல்வேறு மாநிலங்களிலும் செயல் படத் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் திருச்சபைகள் இந்த சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு கல்வி புகட்டுவதிலும் அவர்தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தின. பின்வரும் காலங்களில் அவர்களுக்கு வேத அறிவூட்டி திருச்சபைப் பணிகளிலும் ஈடுபடுத்தியது. தினசரி வேத வாசிப்பு, பிரார்த்தனை, மற்றும் மிஷனெறி பணிகளுக்கும் இளைஞர்களை அர்ப்பணித்தது. 1889 ஆம் ஆண்டில் இங்கிலாந்து தேசத்தில் கிறிஸ்தவ பக்திமுயற்சிச் சங்கம் ‘The Student Christian Movement’ (SCM) என்னும் இயக்கமானது வெளி நாடுகளில் மிஷனெறி பணிகளுக்கென தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து The Young Christian Workers (YCW), the Young Christian Students (YCS), Youth For Christ (YFC), Centers for Youth Ministry (CYM), International Youth fellowship (IYF 1995) போன்ற ஊழியங்கள் பல்வேறு காலகட்டங்களில் உலகெங்கும் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலங்களில் உலகில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக கிராமப்புறங்களிலிருந்து இளைஞர்கள் வேலையின் நிமித்தமாக பட்டணங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்தனர். ஆறு நாட்களும் வேலை செய்துவிட்டு விடுமுறை நாட்களில் அவர்கள் அருகில் உள்ள திருச்சபை வாலிபர்களோடு இணந்து ஆன்மீகம், மிஷனெறி, மற்றும் நலப்பணிகளில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கினர். பிற்காலங்களில் திருச்சபைகளில் வாலிபர்களுக்கான ஊழியங்கங்கள் வழியாக வாலிபர் சங்கங்கள் உருவாகத் தொடங்கின. நம் நாட்டில் 1962 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள தூய யோவான் திருச்சபையில் Rev. ஜோ முல்லின்ஸ் அவர்களால் வாலிபர் ஐக்கிய சங்கமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையானது முன்னேறி 20 ஆம் நூற்றாண்டு தொடங்கி தென்னிந்திய திருச்சபைகளில் பல்வேறு வாலிபர் குழுக்களானது வாலிபர் ஐக்கிய சங்கங்களாக உருவெடுக்கத் தொடங்கின.

நம் திருச்சபையின் வாலிபர்கள் 1970 ஆம் ஆண்டுகளின் மத்திய காலகட்டங்களில் தங்களது பங்களிப்புகளை சமூக நலப்பணிகளின் வழியாகத் தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமைகளில், மாலைதோறும் அருகாமைகளில் உள்ள சமூகத்தில் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளான சத்துவாச்சாரி, சேண்பாக்கம், மற்றும் முள்ளிப்பாளயம் போன்ற இடங்களுக்கு மிதி வண்டிகளில் சென்று அங்குள்ள மக்களுக்கு தூய்மை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் பற்றி கற்பித்ததோடு கைப்பிரதி ஊழியங்களையும் செய்து வந்தனர்.

இக்காலகட்டத்தில் வாலிபர்கள் திருச்சபையில் எந்த பொறுப்புகளும் இன்றி உற்சாகமிழந்து காணப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தங்கள் ஆற்றல்களை திருச்சபைப் பணிகளிலும் செலவிட எண்ணியதின் விளைவாகவும், வாலிபர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றம் காண அவா கொண்டமையாலும் 1978 ஆம் ஆண்டின் இறுதியில் நவம்பர் முதலாம் தேதி சகல பரிசுத்தவான்கள் தின ஆராதனைக்குப்பின் ஒன்று கூடி நம் திருச்சபையின் கீழ் வாலிபர் ஐக்கிய சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர். அவர்களில் முக்கியமானோர் திரு. விசுவாசம் செல்லப்பா, திரு. கிறிஸ்டோபர், திரு. ஜெயசீலன், திரு. M.பால்ராஜ், திரு. சுரேந்திர குமார் தாமஸ், திரு.(Late)அருள்குமார், Dr.டேவிட் ஜோயல், Dr.மனோகர் ஜோயல், Dr.V.நியூட்டன், Dr.Y.சிம்ஸன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர். இச்சங்கத்தின் தொடக்க ஊழியமாக அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நம் சபையின் அங்கத்தினர் இல்லங்களை சந்தித்து கிறிஸ்மஸ் கால பாடல்பவனியை நடத்தி சபை மக்களை மகிழ்வித்தனர்.

தொடர்ந்து வாலிபர் சங்கமானது முறைப்படுத்தப்பட்டு பல்வேறு செயல்பாடுகள் குறித்த நடவடிக்கைகளில் இறங்கியது. இதன்நிமித்தமாக மிஷனெறிப் பணிகளில் ஆர்வம் கொண்டு நண்பர் சுவிஷேச ஜெபக்குழு போன்ற ஊழியங்களில் ஈடுபாடு உருவாகியது. இக்காலத்தில் வாலிபர்களாக “வழிகாட்டும் ஒளி” என்னும் ஒரு நாடகத்தை எழுதி, தயாரித்து, நடித்தும் காட்டியதின் மூலமாக கிடைத்த ரூபாய் 40,000/- மானது புது ஆலயக் கட்டிடத்திற்கென நன்கொடையாக அளிக்கப்பட்டது. அதேபோன்று ஒரு இசை நிகழ்ச்சியும் வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கில் நடத்தப்பட்டது.

1982ஆம் ஆண்டு நம் பழைய ஆலயத்தில் வைத்து Dr.பால் தினகரன் அவர்களைக் கொண்டு ‘அடையும்படி நாடு’ என்னும் பொருளில் வாலிபர்களுக்கென ஒரு ஒடுக்கக்கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் வேலூர் வட்டரத்தில் உள்ள அனைத்து திருச்சபை வாலிபர்களுக்கும் ஒடுக்கக் கூட்டங்கள் திரு. கிங்ஸ்லி அருணோதய குமார், மற்றும் திரு.அஷோக் வேதநாயகம் போன்ற பல்வேறுதேவ ஊழியர்களின் செய்திகள் வழியாக நடத்தப்பட்டது. இக்கூட்டங்களில் வேலூரின் அனைத்து திருச்சபைகளுக்கான வேத வினாவிடைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. இதில், நம் திருச்சபை அங்கத்தினர் காலம்சென்ற வழக்கறிஞர் திரு. ஆபேல் அவர்கள் ஞாபகார்த்தச் சுழற்கேடயமானது முதலிடம் வகிக்கும் திருச்சபைக்கு வழங்கப்பட்டுவருகிறது.

இவையல்லாது பாகாயத்தில் உள்ள CMC மருத்துவமனையின் மறுவாழ்வு நிலயத்திற்குச் சென்று, ஊனமுற்றோருக்கு நம்பிக்கையூட்டும் வண்ணமாக வசனங்கள் மற்றும் செய்திகளோடு இயேசுக்கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்து, ஜெபித்து வருதல் போன்ற பணிகளும் நடந்தன. 2015 ஆம் ஆண்டு கசம் என்னுமிடத்தில் ஒரு வாலிபர் ஒடுக்கக் கூட்டம் நடத்தப்பட்டது. 2015-2017 ஆம் ஆண்டுகளில் ஆலயம் புதுப்பித்தல் வேலைக்கென நிதி திரட்டுதல் மற்றும் வாலிபர் ஐக்கியத்தின் பண்டிகைகளுக்கான நிதி சேகரிப்பு ஆகிய பணிகளும் நடந்தன. வாலிபர்களின் இல்ல சந்திப்பு, விசேஷித்த நாட்களில் ஆராதனைகளில் சிறப்புப் பாடல்கள் பாடுதல், பண்டிகை நாட்களில் ஆலயத்தை அலங்கரித்தல், அறுப்பின் பண்டிகையில் சிறப்புப் பங்களிப்பு, விடுமுறை வேதாகமப் பள்ளி மற்றும் ஞாயிறுப்பள்ளி செயல்பாடுகளில் உதவுவது, பாடகர் குழு மற்றும் கிறிஸ்மஸ் கால பாடல் பவனியை வழிநடத்துதல் ஆகிய பல்வேறு ஊழியங்களிலும் இச்சங்கமானது முன்னின்று நடத்துவது குறிப்பிடத்தக்கது. மத்திய வட்டார வாலிபர் சங்கத்தின்கீழ் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு போட்டிகளிலும் பரிசுகளைபெற்றுவருகின்றனர். அதோடு "வாலிபர் செய்திமடல்" ஒன்றும் ஆலய நிகழ்வுகள், சிறப்புச் செய்திகள், கவிதைகள், வேத அறிவுப்போட்டிகள், மற்றும் இதர அறிவிப்புகள் உள்ளடக்கியாதாக மாதந்தோறும் வெளியிடப்பட்டு வந்தது.

தற்கால உலகத்தின் சமூதாயச் சீரழிவுகளில் உலகம் முழுவதிலும் உள்ள அனேக வாலிபர்கள் அகப்பட்டு தங்கள் ஆத்துமாக்களை அழிக்கும் கால கட்டத்தில், நம் திருச்சபை வாலிபர்கள் திருச்சபையைக் கட்டி எழுப்பும் பணிகளின் மூலமாய் பரிசுத்தத்தை காத்துக் கொள்வதோடு பல்வேறு ஆக்கப்பணிகளையும் செய்து ஆண்டவரை மகிபைப் படுத்திவருவது மகிழ்ச்சியாயிருக்கிறது. வாலிபர் ஐக்கிய சங்கத்திற்கு ஜெபங்களின் மூலமாகவும், நன்கொடைகள் மூலமாகவும் உற்சகப்படுத்தி ஒத்துழைப்பு அளித்துவரும் திருச்சபை மக்களுக்கும் திருச்சபையின் அனைத்துச் செயற்குழுக்களுக்கும் வாலிபர் சங்கம் நன்றியுடையதாயிருக்கிறது.


“வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள் வதினால்தானே” (சங். 119:9) என்று சங்கீதக்காரன் கூறும் வண்ணமாக வேதத்தின் துணைகொண்டு வாலிப சமுதாயம் மேன்மேலும் வேத வசனங்களைப் பின்பற்றி தொடர்ந்து வாழ்க்கையில் சிறப்புற ஆண்டவர் அருள் புரிவாராக!

இப்படிக்கு, வாலிபர் ஐக்கியச் சங்கம்

Youth Fellowship


Reflecting back on the glorious days of our past Youth Fellowship, when our young fore-fathers took root on this Garden called Church, stood firm in Faith and grew and yielded a crop; some thirty, some sixty and some a hundred.

Though in our limited thinking prowess, we could count several glorious moments believing it to be great in building the kingdom of God, but God's journal is going to be surprisingly different that Christ Jesus himself has said that giving even a cup of cold water to the needy will be accounted in heaven.

Yes, years back when pedaling a bicycle was still a fashion, our forefathers in the Youth Fellowship were deeply engaged in playing their part. They looked not only into their own future but into future of needy and the future of fellow youth from other churches. On Sunday evenings, wearing their bell bottoms, they pedaled to places where people were socially downtrodden. They rode the streets of Sathuvachari, Senbakkam and Mullipalayam, where they promoted social welfare, teaching about cleanliness and disease prevention, and handed out tracts proclaiming the gospel of Jesus.

In an effort to encourage and showcase the young talent in the church, The Youth Fellowship gradually went on to publish a Monthly Newsletter by the name “Vaalibar Seithi Madal”. To support our Church Expansion, they wrote, produced, directed and acted in a play “Vazhikaatum Vazhi”, raising up more than Rs. 40,000. They also conducted a Musical concert at the Anna Kalai Arangam.

Our Church Youth Fellowship has been supportive of homegrown missionary efforts, especially supporting Friends Missionary Prayer Band (FMPB) since the mid 70s.

To encourage and build up the youth of Vellore, yearly Youth Retreats were conducted in the late 70s with invitations sent to all churches in Vellore. Some of the well-known preachers featured were Paul Dhinakaran, Kingsley Arunodhayakumar and Ashok Vedanayagam. Inter Church Quiz competition with Rolling Trophy in memory of (Lawyer/Advocate) J. V. Abel was also conducted.

In mid 2010s, our Youth Fellowship visited CMC’s Rehabilitation Center on weekends to encourage the immobile patients and share a word of hope & love in Christ Jesus.

Some special moments of our recent past are the Youth retreat in Kasam (2015), Youth Festival Fundraiser 2015-17 for church renovation and Young Couple’s Retreat.

Our Youth Fellowship have also done some quiet work in house visiting to encourage fellow youth on several occasions.

The exceptional efforts of our church youth in supporting VBS, Sunday School, Choir, Carol Rounds, Harvest festival, Church decoration, special songs on youth Sundays, Christmas programs and many other church oriented programs is well-known.

As we look on our past, let us learn from it and continue to grow into our future. Is it not every young person’s wish and desire to grow into a wise, strong and beautiful person? But it is even more desirable to grow stronger and look beautiful in the eyes of our Lord Jesus Christ, and to bear fruit for Him.

As Psalm 119:9 affirms “How can a young man keep his way pure? By living according to Your word”, let us grow closer and closer to God so that we would be “like arrows in the hands of a warrior” - Psalm 127:4. The scripture exhorts us, that when God gifts us the Spirit, to “do whatever your hand finds to do, for God is with you” - 1 Sam 10:6. And to “do it with all your might” – Ecclesiastes 9:10.

May all our young members be blessed as “Salt and Light of the earth” – Mt 5:13-16.