பாடகர் குழு

“அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக” (சங்கீதம் 149:1) வேதாகமத்தில் இசை பற்றிய முதல் குறிப்பு ஆதியாகமத்தில் உள்ளது. ஆதியாகமம் 4:21 ல் “ஆதாளுக்கு யூபால் என்று இன்னொரு மகன் இருந்தான். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் போன்றோருக்குத் தந்தை ஆனான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.”

தேவாலய பாடகர் குழுவின் கருத்து காலாவதியானது என்று கருதுபவர்கள் இன்று உள்ளனர். இருப்பினும், பாடகர் குழுவின் வரலாறு மற்றும் நோக்கத்தைப் பார்த்தால், அவ்வாறு கருதுவது தவறானது என்பது தெரிய வரும். "தேவாலய பாடகர் குழு" வின் தோற்றம் ரோமன் கத்தோலிக்கத்தில் அல்லது கிறிஸ்தவத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை, ஆனால் பழைய ஏற்பாட்டில் உள்ளது. முதல் "தேவாலய பாடகர் குழு" சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு தாவீது மன்னரால் நியமிக்கப்பட்டது. இந்த பாடகர் குழுக்கள் இன்று நம்மிடம் உள்ள அனைத்துக் குழுக்களையும் விட மிகவும் தீவிரமானவை. முதல் நாளாகம புத்தகமானது, ஆராதனையில் தாவீதின் இசைத் தேவைகளைப் பற்றிய தகவல்கள் நிறைந்தது. பழைய ஏற்பாட்டில் இசை ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் பாடகர் குழுவானது ஆலய சேவைக்காக லேவியர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட பாடகர் குழுவாகும். பொது பலி செலுத்தும் போது "தகன பலி தொடங்கியதும், இறைவனின் பாடல் தொடங்கியது" (II நாளா. 29:27). சாலமோனின் ஆலயத்தின் பிரதிஷ்டையின்போது, ​​லேவியர்களின் மகன்கள் பாடகர் குழுவுடன் சேர்ந்து கடவுளைப் புகழ்ந்து பாடினர் (II நாளா. 5. 13).

தாவீது ஓர் இசைக்கலைஞர், மற்றும் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவரது இசைக்குழுவில் 4000 பேர் இருந்தனர் (1 நாளாகமம் 23:5). இராகத்தலைவனுக்குத் தாவீதினால் ஒப்புவிக்கப்பட்ட சங்கீதங்கள் மூலமாகவும் நாம் அவரது இசைஞானத்தை அறியலாம்.

முதலில், இசைக்கு நியமிக்கப்பட்ட லேவியர்களின் வேலை முழு நேரமாக இருந்ததால் அவர்கள் வேறு எந்த வேலையும் செய்யவில்லை. வாசஸ்தலத்தில் கடவுளை ஆராதிக்க வாரத்தில் 7 நாட்களும், 24 மணிநேரமும் இசை இருக்க வேண்டும் என்று தாவீது கட்டளையிட்டது போல் தெரிகிறது. இந்த லேவியர் குழுவினர் எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தை சாலொமோன் கட்டி முடிக்கும்வரை, ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பாகப் பாடலுடன் ஊழியம் செய்தார்கள். (1 நாளா 6:32).

தாவீது, உடன்படிக்கைப் பெட்டியைவைத்துள்ள ஆசரிப்புக் கூடாரத்தினுள் லேவியர்களின் தலைவர்களிடம் இசைக்கருவிகளையும், சுரமண்டலங்களையும், சத்தமாக ஒலிக்கும் கைத்தாளங்களையும், ஆனந்த சத்தங்களையும் எழுப்பும்படி பாடகர்களை நியமிக்கும்படி கட்டளையிட்டான் (1 நாளா 15:16, 16:42). சாலொமோனின் நாளில் தேவாலயத்தில் பாடலுடன் சேவை செய்ய லேவியரின் பாடகர் குழு சென்றது. இந்த புத்தகத்தில் நாம் மீண்டும் இசைக்கலைஞர்களின் பங்கைக் காண்கிறோம். (2 நாளா. 5: 12-13, 6:7)

2 நாளா 20:21-22 ல் யோசபாத் பாடகர்களை முன் நிறுத்தி பாட்டு பாடியதனால் எதிரிகளைத் தேவன் முறியடித்தார் என்று பார்க்கிறோம். அவர்கள் பாடித் துதிக்க ஆரம்பித்தபோது, ​​யூதாவுக்கு விரோதமாக வந்திருந்த அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத் தேசத்தாராகிய புத்திரருக்கு விரோதமாக கர்த்தர் எழும்பியதால் அவர்கள் முறியடிக்கப்பட்டனர்”

2 நாளா. 25:5-6 மற்றும் 2 நாளா. 35:25, எஸ்றா 2:65 ஆகிய வசனங்களில் பாடகர் குழுவில் பெண்களின் பங்கையும் பார்க்கிறோம்.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? முதலாவதாக, இசை என்பது கடவுளை மகிமைப்படுத்தி ஆராதிக்க பயன்படுவது என்றும் இரண்டாவதாக இது ஒரு நற்செய்தி ஊழியம் என்பதையும் அறியலாம். இசை என்பது இறை வழிபாட்டில் தேவனை துதிக்கவும் ஆராதிக்கவும் பயன்பட்டதோடு ஆராதனை வழிபாட்டின் அணிகலனாய் இருப்பதையும் அறியலாம். இசையின் மூலம் ஆண்டவர் மகிமைப்படுவதால் அதில் தெய்வீகம் இருப்பதையும் உணர இயலும்.

திருச்சபை இசையானது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உன்னத நிலையில் இருந்தது. அதிகபடியான பாமாலைப் பாடல்களும் இக்காலகட்டத்தில் உருவாயின. மேலை நாடுகளில் ஆலய ஆராதனையின் பாடகர் குழுக்களில் (Choir) இசைக்கருவி இயக்குநர் (Organist), இசை இயக்குநர்(Choir Master), மற்றும் பாடகர் குழு அங்கத்தினர்கள் இணைந்து ஆராதனைமூலமாக ஆண்டவரை மகிமைப்படுத்தினர். இவர்கள் அனைவரும் பாடகர்குழுவிற்கென வரையறுக்கப்பட்ட அங்கிகளை அணிந்து (2 நாளா. 15: 27-28) எல்லா ஆராதனைகளயும் சிறப்பிப்பது குறிப்பிடத்தக்கது. நவீன காலத்தில் பாடகர் குழுவினர் அச்சிடப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்ளுகின்றனர். அதோடு நான்கு விதமான குரல் இணப்புகளை உருவாக்கித் திருச்சபை இசைக்கு மெருகூட்டி பாடுவது இனிமையாக உள்ளது

இவ்வாறாக தொழுகையில் முக்கியத்துவம் வாய்ந்த பாடகர் குழுவின் செயல் பாடுகளை நமது வேலூர் சகல பரிசுத்தவான்களின் திருச்சபையும் பின்பற்றுவதில் பேரானந்தம் கொள்கிறோம். சமீப காலங்களில் திருச்சபை ஆராதனைகளில் வேத முறைமைக்கு மாறான பல மாற்றங்களை உட்புகுத்தி பாடகர் குழுவின் முக்கியத்துவத்தை புரட்டுவதைக் காண இயலும். நமது திருச்சபையானது 1873 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆங்கிலிக்கன் முறைமையைப் பின்பற்றி ஆராதனைகளை கடைபிடிப்பதோடு, பாடல் வழிபாடுகளையும் பின்பற்றி ஆண்டவரை மகிமைப்படுத்தி வருகிறது. இடைப்பட்ட காலத்தில் சிறிது தொய்வு அடைந்து அதன் பின் 1968 ஆம் ஆண்டு புத்துணர்வு பெற்றது. இக்காலகட்டத்தில் பல்வேறு பணியாட்கள் சபையின் செயற்குழு மூலமாக நியமிக்கப்பட்டு செயலாற்றினர். அதுமுதல் தற்போதுவரை பாடகர் குழுவானது சிறப்புடன் செயல் படுவதைக்கண்டு ஆண்டவரைத் துதிக்கிறோம். சமீப காலத்தில் ஆராதனை முறையில் உள்ள ஜெபங்களையும், விண்ணப்பங்களையும், சங்கீதங்களையும் பாடலாக பாடி ஆண்டவரை துதித்துவருவதும் ஆங்கிளிக்கன் முறைமையை நினைவுபடுத்துவதாக உள்ளது.

நமது பாடகர் குழுவின் முக்கிய செயல்பாடுகள்:
• ஞாயிற்றுக் கிழமை ஆராதனைகளை சிறப்பித்தல்.
• பண்டிகை நாட்களில் சிறப்பு பயிற்சிகள் மூலம் சிறப்புப்பாடல்கள் மூலமாக ஆண்டவரை மகிமைப்படுத்துதல்,
• சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிறு ஆராதனைக்குப் பின் பாடற்பயிற்சி அளித்தல்,
• அடக்க ஆராதனைகளில் பங்கெடுத்தல்.
• திருமண ஆரதனைகளில் பங்கெடுத்தல்.
• மறுமைக்குள் சென்றோர் வீடுகளுக்கு சென்று பாடல்கள் மூலமாக குடும்பத்தாரை ஆறுதல் படுத்துதல்.
• கிறிஸ்மஸ் காலங்களில் கிறிஸ்மஸ் கீத ஆராதனை நடத்துதல்.
• ஞாயிறு ஆராதனைகளின் செய்திக்கு ஏற்ப பாடல்களை தெரிவுசெய்து பயிற்சி அளித்தல்.
• பாடகர் குழுவாக சரித்திரத்துவம் வாய்ந்த இடங்களுக்கு உல்லாசப் பயணம் செல்லுதல்.
• திரு முழுக்கு ஆராதனைகளை சிறப்பித்தல்.
• திருமணத் தம்பதிகள் முதல்முறை ஆலயத்திற்கு வரும்போது வாழ்த்துப் பாடல்கள் பாடி வரவேற்றல்.
• குருத்தோலை ஞாயிறு அன்று ஆலயத்திற்கு வெளியில் நடைபெறும் பாடல் பவனியை வழிநடத்துதல்.
• ஆண்டு தோறும் நடைபெறும் கிறிஸ்மஸ் கால கீத பாடல் பவனி மூலமாக சபையின் குடும்பங்களை சந்தித்தல்.
• தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்களிப்பு.
• அனைத்துச் சபை கிறிஸ்மஸ் கீத ஆரதனைகளில் பங்களிப்பு.

இத்தகைய சிறப்புவாய்ந்த சகல பரிசுத்தவான்கள் திருச்சபையின் பாடகர் குழுவினை இதுவரையிலும் சீராகவும் மிகச் சிறப்புடனும் வழிநடத்திவந்தவர்களில் கீழ்கண்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


ORGANISTS and CHOIR MASTERS:-


திரு. A. சாமுவேல் - (1928) ORGANIST/CHOIR MASTER
Rev. பீஸ் B. டேவிட் - (1929 - 1932) ORGANIST/CHOIR MASTER
திரு. சற்குணர் - (1932 - 1938) ORGANIST/CHOIR MASTER
திரு. நவமணி ஹாரிஸ் - (1932 - 1938) ORGANIST/CHOIR MASTER
திருமதி. சோபி செல்வநாயகம் - (1932 - 1938) ORGANIST/CHOIR MASTER
திருமதி. ஃப்ளோறா சந்தோஷம் - (1932 - 1938) ORGANIST/CHOIR MASTER
திருமதி. ஃப்ளாறண்ஸ் செல்வனாயகம் - (1938 - 1941) ORGANIST/CHOIR MASTER
திருமதி. அலெக்ஸாண்டர் - (1941 - 1944) ORGANIST/CHOIR MASTER
திருமதி. க்ளோறி மோஸஸ் - (1944 - 1946) ORGANIST/CHOIR MASTER
திருமதி. ராஜேஸ்வரி ரோலண்ட்ஸ் (1946 - 1948) ORGANIST/CHOIR MASTER
திரு. பீஸ் ஐசக் சாமுவேல்ராஜ் - (1948 - 1968) ORGANIST/CHOIR MASTER
திரு. K. ஆல்பெர்ட் - (1968 - ) ORGANIST/CHOIR MASTER
திரு. J. H. தாமஸ் - (1968 - 2015) ORGANIST
திரு. J. செல்லதுரை - (1968 - 2015) CHOIR MASTER
திரு. ரிச்சர்ட் - (1990 - 2015) ORGANIST
திரு. தேவ இரக்கம் ஜேக்கப் - (2005 - 2010) ORGANIST/CHOIR MASTER
திரு. காலின்ஸ் வசந்த குமார் (2015 - ) ORGANIST
திரு. ஜாஷ்வா பால்ராஜ் ஃபென் (2022 - ) ORGANIST
திரு. ஜெஸ்வின் சார்லஸ் (2022 - ) ORGANIST


CHOIR CONVENORS:-


  1. திரு. ஹில்லெல் ஜாண்ஸன் - (2000 - 2004)
  2. Dr. மனோகர் ஜோயல் (2005 - )

இத்திருச்சபையில் பாடற்குழுவின் மூலமாகவும், திருச்சபையின் மூலமாகவும் பல்வேறு வழிகளில் நம் தேவனை பாடித் துதித்து ஆராதிப்பதில் பங்கெடுக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி நன்றி கூறுகிறோம்.

இப்படிக்கு
சகல பரிசுத்தவான்கள் திருச்சபை பாடகர்குழு.