பெண்கள் ஐக்கிய சங்கம்

“சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.”
நீதிமொழிகள் 31: 20.

ஆதித் திருச்சபை தொடங்கி இன்றுவரை திருச்சபை பணிகளில் பெண்களின் பங்கு இணைபிரியாத ஒன்றாக இருந்து வருகிறது. இயேசு நாதரின் பிறப்பு தொடங்கி இறப்பு, உயிர்ப்பு மற்றும் பரமேறுதல் வரையிலும் கூட பெண்களின் சீடத்துவம் மற்றும் முக்கிய பங்களிப்புகள் மேலோங்கி காணப்பட்டன.

சகல பரிசுத்தவான்கள் திருச்சபையின் வரலாற்றிலும் கூட பெண்களின் பணி இணைபிரியாத ஒன்றாக அமைந்திருப்பதை நம் சபையின் அனைத்து அங்கத்தினர்களாலும் கண்கூடாக உணர முடிகின்றது. சபை ஆரம்பித்த நாள் முதற்கொண்டு இச்சபையின் பெண்கள் திருச்சபை ஊழியம், சமூக பணி, ஏழைகள் ஆதரிப்பு, நற்செய்திப் பணி, மருத்துவப் பணி, ஜெப ஊழியம் போன்ற மேலும் பல்வேறு நற்பணிகளில் தங்களை ஈடுபடுத்திகொண்டு சபைக்கு பக்கபலமாய் இருந்துவருவது ஆசீர்வதமாக அமைந்துள்ளது.

1873 ஆம் ஆண்டு 35 குடும்பத் தலைவிகளைக் கொண்டு “தாய்மார் ஒன்றியம்” (Mothers’ Union) என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட சங்கமே தற்போது “பெண்கள் ஐக்கிய சங்கம்” (Women’s Fellowship) என்ற பெயரில் செயல் பட்டுவருகிறது. தற்பொழுது.நம் திருச்சபையின் பெண்கள் அனைவருமே இதின் அங்கத்தினராய் இருந்து வெகு சிறப்பாய் செயல்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சிக்கும் பாராட்டிற்கும் உரியது.

இச்சங்கத்தின் சார்பாக ஆண்டாண்டுகளாக செய்யப்பட்டுவரும் கீழ்க்கண்ட முக்கியமான பணிகளை இங்கே குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்:

திருச்சபை பணிகள்:

 • பழைய மற்றும் புதிய ஆலய கட்டுமானப் பணிகளுக்கென பணம் திரட்டி உதவுதல்
 • வாரம்தோறும் ஆலயத்தில் கூடி பல்வேறு தேவைகளுக்காக ஜெபித்தல்
 • ஆலய திரைச் சீலைகளை தயார் செய்தல் மற்றும் சீர்செய்தல்
 • விழாக்காலங்களில் ஆலயத்தைக் கழுவி தூய்மைப் படுத்துதல்
 • பிடியரிசி காணிக்கை மூலம் வரும் பணத்தை ஆலய தேவைகளுக்கு கொடுத்தல்
 • ஆண்டுதோறும் மங்களவாக்குத் திருநாளன்று ஆராதனையை சிறப்பிப்பதோடு ஒரு நாள் ஒடுக்கக் கூட்டம் நடத்துதல்
 • குற்றமில்லா பாலகர் திருநாளன்று ஆலயத்தின் கீழ் இயங்கிவந்த பள்ளி மாணவர்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு உணவளித்தல்
 • சபை விற்பனை விழாக்களின் போது உணவுப்பண்டங்கள் மற்றும் இதர ஏலப்பொருட்களைப் படைத்து சபையின் பணத் தேவைகளில் உதவுதல்
 • சபைக்கு தேவையான ஒலிபெருக்கி, பாத்திரங்கள் தட்டு மற்றும் டம்ளர்கள், தரைவிரிப்புகள் போன்ற தட்டு முட்டு சாமான்களை வாங்கி உதவுதல்
 • புதிய ஆலயத்தின் தரைக்கு டைல்ஸ் (Tiles) பதிக்க முழு பண உதவி
 • ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் நோயுற்றிருக்கும் சபை மக்களை சந்தித்து அவர்களுக்காக ஜெபித்தல்
 • கிறிஸ்மஸ் விழாக்களின் போது ஆயர், ஆயர் அம்மா, துணை ஆயர்,கோயில் பிள்ளை, ஆர்கனிஸ்ட், (Organist) பாடகர் குழு தலைவர், ஓய்வுநாள் பள்ளி செயலர் ஆகியோருக்கு பரிசுகள் அளித்து உற்சாகப்படுத்துதல்
 • ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுககிழமை ஆராதனைகளில் வேத பாடம் வாசிப்பு, காணிக்கை சேகரிப்பு, மற்றும் சிறப்புப் பாடல்கள் மூலமாக ஆலய ஆராதனையை சிறப்பித்தல்
 • உலக பெண்கள் ஞாயிறு ஆராதனையை முழுமையாக பொறுப்பேற்று நடத்துதல்
 • கிறிஸ்மஸ் காலத்தில் அனைத்து பெண்கள் சங்க அங்கத்தினர்களுக்கும் பரிசளித்து உற்சாகப்படுத்துதல்
 • புதுவருட ஆராதனைக்குப்பின் ஆயர் மற்றும் ஆயர் அம்மாவை சந்தித்து பரிசளித்து கௌரவித்தல்
 • ஆயர் பணி ஓய்வு, மற்றும் புது ஆயர் பணியேற்புகளின் போது அவர்களைக் கௌரவித்தல்
 • ஆண்டிற்கு ஒருமுறை ஒருநாள் பெண்கள் ஒடுக்கக் கூட்டம் நடத்துதல்
 • சபை அங்கத்தினரின் துக்க வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி, ஜெபித்து உணவளித்து உதவுதல்

பேராயப் பணி:

 • மங்கள வாக்கு திருநாளன்று உறைகாணிக்கை சேகரித்து பேராயத்திற்கு அளித்தல்
 • பேராயத்தில் வேதாகமப் பெண்கள் (Bible Women) ஆக பணிபுரியும் இரண்டு பெண்களுக்கு ஆதரவுத் தொகை அளித்தல்
 • பேராயத் தூதுப்பணி விழாவின்போது விற்பனையகம் அமைத்து உணவுப்பண்டங்கள் மற்றும் இதர விற்பனைப் பொருட்களைப் படைத்து அதன் மூலம் வரும் பணத்தை பேராயத்திற்கு அளித்தல்
 • பேராய பெண்கள் ஐக்கிய சங்கத்தில் பொருளாளர் (திருமதி. நேசம் ஜோயல்) மற்றும் அங்கத்தினர் பொறுப்புகளை ஏற்று பேராயத்திற்கு துணை புரிதல்
 • ஆண்டுதோறும் பேராய பெண்கள் வாரியத்துடன் இணைந்து உலக ஜெப நாட்களில் பல்வேறு நலப் பணிகளில் ஈடுபடுதல்

பாடகர் குழு பணிகள்:

 • பாடகர் குழுவில் தாய்மார்களும் ஆர்கனிஸ்ட் ஆக பணியாற்றியுள்ளனர்
 • பாடகர் குழு அங்கத்தினர்களின் அங்கிகளில் உள்ள பழுதுகளை சீர்செய்தல்

வேதாகமப் பள்ளி பணி:

 • வேதாகமப் பள்ளியில் ஆசிரியைகளாக பணிபுரிதல்
 • விடுமுறை வேதாகமப் பள்ளி மாணவர்களுக்கு உணவுப்பண்டங்கள் அளித்து ஊக்குவித்தல்

கிராமத் திருச்சபைப் பணி:

 • சத்துவாச்சாரி மற்றும் முள்ளிப்பாளையத்திலுள்ள நம் சபையின் கிளைச் சபைகளில் நற்செய்திப்பணி
 • அச்சபைகளில் வேதபாட வகுப்புகள் நடத்துதல்
 • பண்டிகை காலங்களில் இரு சபை மக்களுக்கும் துணி மணிகள் வழங்குதல்

கீழ்க்கண்ட தாய்மார்கள் பல்வேறு கால கட்டங்களில் இச்சங்கத்தின் முக்கிய பொறுப்புகளிலிருந்து கொண்டு நம் திருச்சபையில் சிறப்புடன் பணியாற்றியது போற்றப் படத்தக்கது:

திருமதி. ஹாரிஸ், திருமதி. இரத்தின மணி சாமுவேல்ராஜ், திருமதி. ஜூபிலி தாமஸ், திருமதி. கிரேஸ் பாண்டிய ராஜ், திருமதி. மணி ஆபேல், திருமதி. பால் டேவிட், திருமதி. ஜி.டி.பி. ராஜ், திருமதி. நேசம் ஜோயல், திருமதி. டெய்சி ஞானம், திருமதி. இசபெல்லா சார்லஸ், திருமதி. ஹெப்சிபா தாமஸ், திருமதி. கிளாடிஸ் பீட்டர், திருமதி. இரத்தினம்மாள் ஆல்பர்ட், திருமதி. ஜாய் ரெத்தின ராஜ், திருமதி. செல்லம் கிருபாகரன், திருமதி. சுந்தரி எட்வின், திருமதி. கிறிஸ்டி சிம்சன், திருமதி. ஜாய்ஸ் ஸ்டீபன் , திருமதி. மேபல் ஜோசப். கிராம திருச்சபைப் பணிகளில் திருமதி. கஸ்தூரி சாமுவேல்ராஜ், திருமதி ஜெமிமா செல்வின், திருமதி ரெத்னாபாய் ஜோயல் ஆகியோரது பணிகள் போற்றுதற்குரியது.

இவ்வாறாக தேவனை மகிமைப்படுத்தும் நம் திருச்சபையின் பெண்கள் ஐக்கிய சங்கம் தொடர்ந்து தங்களது பணிகளை இடைவிடாது செய்ய ஆண்டவர் அருள்புரியுமாறு நாம் அனைவரும் ஆண்டவரிடம் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இப்படிக்கு, பெண்கள் ஐக்கிய சங்கம்